உருகுவேயில் 6 தொன் கொக்கெய்ன் கைப்பற்றல்

உருகுவேயில் 6 தொன் கொக்கெய்ன் கைப்பற்றல்

by Staff Writer 28-12-2019 | 7:34 PM
Colombo (News 1st) உருகுவேயில் 6 தொன் நிறையுடைய கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. உருகுவே வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தொகைப் போதைப்பொருளாக இது அமைந்துள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களின் மிகப்பெரும் பின்னடைவாகவும் வரலாற்றில் இது பதிவாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கடற்படை மற்றும் சுங்க அதிகாரிகள் இணைந்து 4.4 தொன் போததைப்பொருளை மொன்டேவீடியோ துறைமுகத்தில் கைப்பற்றியுள்ளனர். சோயாமா கொள்கலன்கள் நான்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டிருந்தன. அடுத்ததாக 1.5 தொன் போதைப்பொருள் பண்ணை ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 1.3 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு போதைப்பொருட்களைக் கடத்துவதற்கான முக்கிய தளமாக உருகுவே பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.