ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம்

ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2019 | 7:30 pm

Colombo (News 1st) தமக்குத் தெரிந்த மொழியில் தாய்நாட்டை புகழ்ந்து பாடுவதையே அனைவரும் விரும்புவதாகத் தெரிவித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறிப்பிட்ட ஒரு மொழியில் பாடவேண்டும் என வற்புறுத்துவது, எதிர்காலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், குளவிக்கூட்டிற்கு கல்லெறிய எவரையும் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும் வீ. ஆனந்தசங்கரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அனுப்பியுள்ள தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

விளைவுகளைப் பற்றி சிந்திக்காத சிலர் திட்டமிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்