by Staff Writer 28-12-2019 | 3:07 PM
Colombo (News 1st) கேகாலை - பிந்தெனிய, அட்டாள பகுதியில் கேரள கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் குற்றச்செயலில் ஈடுபடும் குழுவின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதாள செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபரான 'கரந்தெனிய சுத்தா' என்பவரின் நெருங்கிய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மிக நீண்டகாலமாக குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து இரண்டரை கிலோகிராம் கேரள கஞ்சாவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.