கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீளத் திறக்க நடவடிக்கை

கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீளத் திறக்க நடவடிக்கை

கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீளத் திறக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2019 | 7:29 pm

Colombo (News 1st) கடந்த 25 ஆண்டுகளுக்கும் அதிக காலமாக மூடப்பட்டுள்ள கந்தளாய் சீனித்தொழிற்சாலையை மீளத்திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இந்தத் தொழிற்சாலையை மீளத்திறப்பதனூடாக சுமார் 5000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், சீனி இறக்குமதிக்காக செலவிடப்படும் சுமார் 4,000 மில்லியன் ரூபாவைச் சேமிக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய முதலீட்டாளர் ஒருவரின் முதலீட்டின் கீழ் கந்தளாய் சீனித்தொழிற்சாலையை அடுத்த 3 மாதங்களுக்குள் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த 3 மாதங்களுக்குள் தொழிற்சாலை மீண்டும் இயங்கும் நிலைக்கு புனரமைப்புச் செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்