உருளைக்கிழங்கிற்கான மொத்த விலையில் மாற்றம்

உருளைக்கிழங்கிற்கான மொத்த விலையில் மாற்றம்

உருளைக்கிழங்கிற்கான மொத்த விலையில் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2019 | 3:25 pm

Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கான மொத்த விலையில் 50 ரூபா குறைக்கப்பட்டுள்ளதாக உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு 25 ரூபா வரி குறைக்கப்பட்டமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஹேமக பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மொத்த விலை குறைக்கப்பட்டதைப் போன்று உருளைக்கிழங்கிற்கான சில்லரை விலையும் குறைக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.

பண்டிகைக் காலம் மற்றும் சந்தையில் தற்போது மரக்கறிகளுக்கு நிலவும் அதிக விலை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அண்மையில் உருளைக்கிழங்கிற்கான இறக்குமதி வரி 25 ரூபாவாக குறைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்