நாட்டிற்கு வரவிருக்கும் ரஷ்ய வௌிவிவகார அமைச்சர்

நாட்டிற்கு வருகை தரவிருக்கும் ரஷ்ய வௌிவிவகார அமைச்சர்

by Staff Writer 27-12-2019 | 8:21 PM
Colombo (News 1st) ரஷ்ய வௌிவிவகார அமைச்சர் சேர்ஜே லெவ்ரோவ் (Sergey Lavrov) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டிற்கு வருகைதரவுள்ள ரஷ்ய வௌிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அரச உயரதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.