மழையுடனான வானிலையால் 28 வான்கதவுகள் திறப்பு

மழையுடனான வானிலையால் 28 வான்கதவுகள் திறப்பு

மழையுடனான வானிலையால் 28 வான்கதவுகள் திறப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Dec, 2019 | 3:12 pm

Colombo (News 1st) கடந்த நாட்களில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குட்பட்ட 75 நீர்த்தேக்கங்களின் 28 வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 88 வீதமாக அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 70,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 1286 பேர் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்