by Chandrasekaram Chandravadani 26-12-2019 | 7:53 PM
Colombo (News 1st) லிபியாவுக்கு அடுத்த மாதமளவில் தமது படையினரை அனுப்பவுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
லிபிய அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
லிபிய தலைநகர் திரிபோலியில் இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் தமது படையினரை அங்கு அனுப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
லிபியாவில் அரச படைக்கும் முன்னாள் படைத்தளபதி கலிபா ஹப்தாரின் படைக்கும் இடையே மோதல் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் லிபியா அரசு, துருக்கியுடன் ஒரு மாதத்துக்கு முன்னர் இராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட 2 ஒப்பந்தங்களை செய்துகொண்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், லிபியா விடுத்த வேண்டுகோளை ஏற்று பாராளுமன்ற ஒப்புதலை அடுத்த மாதம் பெற்றதன் பின்னர் அந்நாட்டுக்கு தமது இராணுவத்தை அனுப்ப தீர்மானித்துள்ளதாக செய்திருப்பதாக துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் அறிவித்துள்ளார்.