உருளைக்கிழங்குக்கான தீர்வை வரி குறைப்பு

இறக்குமதியாகும் உருளைக்கிழங்குக்கான தீர்வை வரி குறைப்பு

by Staff Writer 26-12-2019 | 3:25 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான தீர்வை வரி நேற்று (25) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரி 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் உருளகை்கிழங்குக்கான வரி 50 ரூபாவாக காணப்பட்டதாக நிதியமைச்சின் செயலாளர் S.R. ஆட்டிகல தெரிவித்துள்ளார். உள்ளூர் சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளமையாலும் உள்ளூர் உருளைக்கிழங்கு பயன்பாட்டிற்குப் போதுமான அளவு இன்மையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிதியமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.