பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயலில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயலில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸைத் தாக்கிய புயலில் சிக்கி 13 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

26 Dec, 2019 | 3:32 pm

Colombo (News 1st) பிலிப்பைன்ஸைத் தாக்கிய பென்போன் (Phanfone) புயலில் சிக்கி குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

உர்சுலா புயல் எனவும் அழைக்கப்படும் குறித்த புயல் மணித்தியாலத்திற்கு 190 கிலோமீற்றர் வேகத்தில் வீசியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை செல்வதற்கு தயாராகவிருந்த ஆயிரக்கணக்கானோர் புயல் தாக்கத்தினால் நிர்க்கத்திக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Phanfone புயலினால் நெடுஞ்சாலைகளினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

புயலினால் பாதிக்கப்பட்ட சுமார் 58,000 இற்கும் அதிகமானோர் தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்