by Staff Writer 26-12-2019 | 3:19 PM
Colombo (News 1st) தேயிலையின் விலை தற்போது நிலையான மட்டத்தில் காணப்படுவதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் ஏலத்தின் போது, ஒரு கிலோகிராம் தேயிலை 570 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை தேயிலை சபை குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தின் நடுப்படுகுதியில் ஒரு கிலோகிராம் தேயிலையின் விலை 530 ரூபாவாகக் காணப்பட்டுள்ளது.