வளைய சூரிய கிரகணம் நாளை

வளைய சூரிய கிரகணம் நாளை

by Staff Writer 25-12-2019 | 4:04 PM
Colombo (News 1st) இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம் நாளை (26) இடம்பெறவுள்ளது. இதனை நாட்டு மக்கள் பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப்பிரிவின் பேராசிரியர் சந்தன தெரிவித்துள்ளார். இது வட மாகாணத்தில் வளைய சூரிய கிரகணமாகவும் அநுராதபுரம், வுவுனியா போன்ற பிரதேசங்களில் அரைப்பகுதி நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளைய சூரிய கரகணத்தை நாளை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலான காலப் பகுதிக்குள் காணக்கூடியதாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. முழுமையான நெருப்பு வளைய சூரிய கிரகணம் சுமார் 4 நிமிடங்களுக்கு இடம்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. வவுனியாவில் காலை 9 மணியளவிலும் கிளிநொச்சியில் காலை 9.36 மணியளவிலும் யாழ்ப்பாணத்தில் காலை 9.35 மணியளவிலும் திருகோணமலையில் காலை 9.38 மணியளவிலும் சூரியகிரகணம் காட்சியளிக்கவுள்ளது. ஆத்தர்சி கிளாக் நிறிவனத்தின் மூலம் இந்த கிரகணத்தை அவதானிப்பதற்காக வடக்கின் பல இடங்களில் ஆய்வு மட்டத்தில் முகாம்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற நகரங்களை கேந்திரமாக கொண்டும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனை நேரடியாக பார்ப்பது கண்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதினால் இதனை ஏற்ற வகையில் கருவிகளை பயன்படுத்தி பார்வையிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.