ஹம்பாந்தோட்டையில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம்

ஹம்பாந்தோட்டையில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க திட்டம்

by Staff Writer 24-12-2019 | 2:52 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேனீ வளர்ப்பை ஊக்குவிப்பதற்கு ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டத்தின் கீழ், 300 தேனீ வளர்ப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட தேனீ வளர்ப்பாளர்களுக்கு தேனீப் பெட்டிகள் இலவசமாக வழங்கப்படுமென ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.