யாழ். மாவட்ட திராட்சைச் செய்கைக்கு சேதம்

யாழ். மாவட்ட திராட்சைச் செய்கைக்கு சேதம்

by Staff Writer 24-12-2019 | 6:03 PM
Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் தொடர் மழையால் திராட்சைப் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது. யாழ். மாவட்டத்தின் உரும்பிராய், மாதகல், நீர்வேலி, உடுப்பிட்டி ஆகிய பகுதிகளில் அதிகளவில் திராட்சைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஏனைய பயிர்களுடன் ஒப்பிடுகின்ற போது திராட்சை செய்கைக்கான முதலீடு அதிகளவில் காணப்படுவதால் அறுவடை வீழ்ச்சியடையும் சந்தர்ப்பதில் அதிகளவிலான நட்டம் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். யாழ்ப்பாண திராட்சைா் பழத்திற்கு நாட்டில் அதிகளவிலான கேள்வி காணப்படுவதுடன், விவசாயிகள் அதிகளவிலான இலாபத்தினை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போது தொடர் மழையினால் திராட்சைப் பயிற்செய்கையாளர்கள் பாரிய நட்டமடைந்துள்ளனர்.