மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமனம்

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமனம்

by Staff Writer 24-12-2019 | 3:17 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் W.D. லக்‌ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசிங்க இதனை நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதி செய்துள்ளார். W.D. லக்‌ஷ்மன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக் கடமையாற்றியுள்ளார். பொருளாதார விஞ்ஞானத் துறையின் விசேட நிபுணரான W.D. லக்‌ஷ்மனுக்கு 2005 ஆம் ஆண்டில் தேசமான்ய கீர்த்திப் பட்டம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.