போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்

போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்

போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

24 Dec, 2019 | 3:29 pm

Colombo (News 1st) போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டென்னிஸ் மியூலன்பேர்க் (Dennis Muilenburg) பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

போயிங் 737 Max ரக 2 விமானங்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தையடுத்து தலைமை அதிகாரி டென்னிஸ் மியூலன்பேர்க் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்துக்களில் 340 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் இந்த விபத்துக்கள் போயிங் நிறுவனத்துக்கு சர்வதேசத்தில் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியிருந்தது.

இந்நிலையில், Dennis Muilenburg பதவியிலிருந்து நீக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமென விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்