சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து வேர்னன் பிலந்தர் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து வேர்னன் பிலந்தர் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து வேர்னன் பிலந்தர் ஓய்வு

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2019 | 7:45 pm

Colombo (News 1st) தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளரான வேர்னன் பிலந்தர் (Vernon Philander) சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் பின்னர் அவர் ஓய்வுபெறுவதற்குத் திட்டமிட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா சார்பாக 60 டெஸ்ட், 30 சர்வதேச ஒருநாள் மற்றும் 7 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ள வேர்னன் பிலந்தருக்கு தற்போது 34 வயதாகின்றது.

2007 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கா சார்பாக சர்வதேச ஒருநாள் அறிமுகம் பெற்ற அவர் சர்வதேச ஒருநாள் போட்டியொன்றில் விளையாடி 4 வருடங்கள் கடந்துவிட்டன.

வேர்னன் பிலந்தர் கடந்த காலத்தில் அதிகளவில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதுடன் பல சந்தர்ப்பங்களில் உபாதைக்குள்ளான போட்டிகளை இழந்தார்.

தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்