நாளை மறுதினம் முதல் மழை குறைவடையும் சாத்தியம்

நாளை மறுதினம் முதல் மழை குறைவடையும் சாத்தியம்

நாளை மறுதினம் முதல் மழை குறைவடையும் சாத்தியம்

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2019 | 8:20 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளை மறுதினம் (25) முதல் தற்காலிகமாகக் குறைவடையக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 50 முதல் 75 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பகுதியில் 208 மில்லிமீற்றரில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையினால் பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், கேகாலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்