தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

தேயிலைக் கொழுந்தின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2019 | 6:13 pm

Colombo (News 1st) மத்திய மாகாணத்தில் தேயிலைக் கொழுந்தின் விலை 95 தொடக்கம் 100 ரூபா வரை அதிகரித்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 65 தொடக்கம் 70 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுவந்த கொழுந்தின் விலை அதிகரித்துள்ளதால், சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் நன்மையடைந்துள்ளனர்.

இருப்பினும், கொழுந்தின் விலை அதிகரிப்பினால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தினமொன்றில் 18 கிலோகிராமிற்கும் அதிகமாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோகிராமிற்கும் 30 ரூபாவே மேலதிகமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்தத் தொகையில் தற்போதும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்