சிரிய அகதிகளுக்கு புகலிடம் இல்லை – துருக்கிய ஜனாதிபதி எச்சரிக்கை

சிரிய அகதிகளுக்கு புகலிடம் இல்லை – துருக்கிய ஜனாதிபதி எச்சரிக்கை

சிரிய அகதிகளுக்கு புகலிடம் இல்லை – துருக்கிய ஜனாதிபதி எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

23 Dec, 2019 | 5:35 pm

Colombo (News 1st) சிரியாவிலிருந்து தஞ்சம் கோரி தமது நாட்டிற்கு வரும் புதிய அகதிகளுக்கு புகலிடம் வழங்க முடியாது என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கி – சிரியா எல்லையில் தஞ்சமடைந்துள்ளனர்.

துருக்கியில் இதுவரை 3.7 மில்லியன் சிரிய மக்கள் தஞ்சமடைந்துள்ளதுடன், உலகில் பெருமளவான அகதிகள் குழுவாக இது அமைந்துள்ளது.

இவ்வாறு பெருமளவாகத் தஞ்சமடைந்துள்ள அகதிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஐரோப்பிய நாடுகளிலும் தென்படுவதாக துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்