சவுதி ஊடகவியலாளர் கொலை ; ஐவருக்கு மரண தண்டனை விதிப்பு

சவுதி ஊடகவியலாளர் கொலை ; ஐவருக்கு மரண தண்டனை விதிப்பு

சவுதி ஊடகவியலாளர் கொலை ; ஐவருக்கு மரண தண்டனை விதிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

23 Dec, 2019 | 4:35 pm

Colombo (News 1st) ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி (Jamal Khashoggi) கொலையுடன் தொடர்புடைய ஐவருக்கு சவுதி அரேபியா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரசாங்கம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, கடந்த வருடத்தில் துருக்கியிலுள்ள சவுதி கன்சியூலர் அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

சவுதி அரேபிய முகவர்களினால் அவர் கொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பெயர் குறிப்பிடப்படாத 11 பேரில் ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்