by Chandrasekaram Chandravadani 22-12-2019 | 9:45 AM
Colombo (News 1st) மாலி இராணுவத்தினருடன் இணைந்து முன்னெடுத்த இராணுவ நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஐவரி கோஸ்ட் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள பிரெஞ்ச் ஜனாதிபதி இது குறித்து அறிவித்துள்ளார்.
ஆபிரிக்க வலயத்தில் ஜிஹாத் பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்கு பிரான்ஸ் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் கூறியுள்ளார்.
2013 ஆம் ஆண்டிலிருந்து ஆயிரக்கணக்கான பிரெஞ்ச் படையினர் மாலியில் நிலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.