by Staff Writer 22-12-2019 | 1:52 PM
Colombo (News 1st) சுமார் 80 அரச நிறுவனங்களுக்கான தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையின் உறுப்பினர்களை நியமிப்பது குறித்த பரிந்துரை, ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பதவியொன்றுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பரிந்துரைக் குழுவின் உறுப்பினர் கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார்.
குறித்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அரச நிறுவனங்களுக்கான தகுதிவாய்ந்தோரின பெயர்களைப் பரிந்துரைக்குமாறு ஜனாதிபதி செயலாளர், குழுவிற்கு ஆலாசனை வழங்கியுள்ளார்.
பரிந்துரை குழுவின் தலைவராக சிரேஷ்ட அரச அதிகாரியான சுமித் அபேசிங்க செயற்படுகின்றார்.
சுசந்த ரத்னாயக்க, கலாநிதி நாலக்க கொடஹேவா, டயன் கோமஸ், டொக்டர் பிரசன்ன குணசேன மற்றும் பேராசிரியர் ஜகத் வெல்லவத்த ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.