போதைப்பொருள் கடத்தல்காரர் மோல் சமிந்தவின் மனைவி ஹெரோயினுடன் கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் மோல் சமிந்தவின் மனைவி ஹெரோயினுடன் கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் மோல் சமிந்தவின் மனைவி ஹெரோயினுடன் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2019 | 10:25 am

Colombo (News 1st) வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான மோல் சமிந்தவின் மனைவி ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் ஹெரோயினுடன் வாழைத்தோட்டம் பகுதிக்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 27 இலட்சம் ரூபா பெறுமதியான 270 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொலைக் குற்றச்சாட்டுகளால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மோல் சமிந்தவின் உதவியுடன், போதைப்பொருள் கடத்தலில் குறித்த 33 வயதான பெண்ணே ஈடுபடுகின்றமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் வாழைத்தோட்டம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்