தேயிலை உற்பத்தியில் புதிய வேலைத்திட்டங்கள்

தேயிலை உற்பத்தியில் புதிய வேலைத்திட்டங்கள்

தேயிலை உற்பத்தியில் புதிய வேலைத்திட்டங்கள்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2019 | 1:04 pm

Colombo (News 1st) தேயிலை உற்பத்தியில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் சொட்டுநீர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீர் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், இந்தப் புதிய வேலைத்திட்டங்களினால் 50 சதவீத செலவுகளைக் குறைக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு ஏக்கருக்கு பெறப்படும் தேயிலைக் கொழுந்தின் அளவு 350 கிலோகிராமிலிருந்து 1000 கிலோகிராம் வரை அதிகரிக்க முடியுமென்பதுடன், இதற்காக 10 இலட்சம் ரூபா நிவாரணமும் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்