அரசின் இருப்பிலுள்ள நெற்தொகை சந்தைகளுக்கு விநியோகம்

அரசின் இருப்பிலுள்ள நெற்தொகை சந்தைகளுக்கு விநியோகம்

அரசின் இருப்பிலுள்ள நெற்தொகை சந்தைகளுக்கு விநியோகம்

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2019 | 7:41 am

Colombo (News) அரசாங்கத்தின் இருப்பிலுள்ள நெற்தொகையை எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னர் அரிசியாக்கி சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சம்பா மற்றும் நாட்டரிசிக்கான அதிகபட்ச விலையை அறிமுகப்படுத்திய போதிலும், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் நேற்றும் சுற்றிவளைக்கப்பட்டன.

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த நூற்றுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் இன்றும் தொடரவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்