ஓய்வு விடுதியில் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் பலி

ஓய்வு விடுதியில் துப்பாக்கிப் பிரயோகம் ; ஒருவர் உயிரிழப்பு

by Staff Writer 21-12-2019 | 2:37 PM
Colombo (News 1st) கதிர்காமம் - சித்துல்பவ்வ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓய்வு விடுதியொன்றில் இன்று (21) அதிகாலை இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்த நபர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டிருக்கக் கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.