தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவுசெய்யும் நேர்முகப் பரீட்சை

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவுசெய்யும் நேர்முகப் பரீட்சை

தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்களைத் தெரிவுசெய்யும் நேர்முகப் பரீட்சை

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2019 | 7:34 pm

Colombo (News 1st) 278 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்கான நேர்முகப் பரீட்சை நாளை (22) ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இந்த நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.

வெற்றிடம் நிலவும் அனைத்து பாடசாலைகளுக்குமான தகுதியான அதிபர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாடசாலைகளைத் தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுச்சேவை ஆணைக்குழுவின் கல்விச்சேவை குழுவின் புள்ளி வழங்கல் திட்டத்தின் கீழ் அதிபர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவை குழுவினுடாக நியமிக்கப்படும் நடுவர் குழாத்தினால் வழங்கப்படும் புள்ளிகளுக்கு அமைய தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்