சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையை இல்லாமல் செய்ய வேண்டும் – சஜித் பிரேமதாச

சிங்கப்பூர் வர்த்தக உடன்படிக்கையை இல்லாமல் செய்ய வேண்டும் – சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2019 | 10:07 pm

Colombo (News 1st) நவோதா லங்கா அமைப்பு, கிரில்லவல நகரில் மக்கள் சந்திப்பொன்றை இன்று (21) ஏற்பாடு செய்திருந்தது.

புதிய ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் படையணியின் உறுப்பினர்கள் சிலருடன் இணைந்து, நவோதா லங்கா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அனைவரும் மாற்றத்தையே எதிர்பார்க்கின்றனர். கடந்த 3 ஜனாதிபதித் தேர்தல்களிலும் தனக்கு முடியாது எனக்கூறி வேறு வேட்பாளர்களை நியமித்தார். இதனூடாகவே தலைமைத்துவத்தில் சிக்கலுள்ளமை புலப்படுகின்றது. எமது அரசாங்கம் ஆட்சியமைத்து, மத்திய வங்கியை முதலில் கொள்ளையடித்தது. அதிலிருந்து தொடர்ந்து தவறுகளை இழைத்தமை. இந்தத் தவறுகள் காரணமாக, எமது தோல்வி உறுதியானது. ஊழல் மோசடியில் ஈடுபட்ட, மத்திய வங்கியைக் கொள்ளையடித்தவர்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு அமைய, அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். இந்த கட்சி அரசாங்கத்தை இல்லாமல் செய்வது, இந்த குழுவினர் என்பதை நாம் அறிவோம். அதனால் அவ்வாறான குழுவினரை நீக்கி, புதிய பயணமொன்றை மேற்கொள்வதற்கு இது உதவும் என நாம் நம்புகின்றோம்

என நவோதா லங்கா அமைப்பின் தலைவர் சுதன் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

காலநிலை மற்றும் வானிலை மாற்றத்தால், புவியின் வெப்பநிலை காரணமாக ஒசோன் மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருடாந்தம் கடல் மட்டம் அதிகரித்துச் செல்வதால் எமது நாட்டிற்கு என்ன நேரப்போகின்றது? இவை அனைத்தும் மிகவும் ஆழமான சிந்திக்க வேண்டிய விடயங்கள். இவ்வாறான விடயங்களை எதிர்நோக்குவது தொடர்பில் நாட்டில் சிறந்த கொள்கையொன்றை வகுத்தல் வேண்டும். சூழலுக்கு மாத்திரமன்றி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் எதிர்காலத்திற்கும் இது அவசியம். எவ்வாறான நாட்டை நாம் நிர்வகிக்கின்றோம்? எவ்வாறான நாட்டை கையளிக்கின்றோம் என்பது தொடர்பில் கவனம் தேவை. வரையறுக்கப்பட்ட தரமான 60 வீதமான சந்தைக்கு எமது ஏற்றுமதி முன்னெடுக்கப்படுகின்றது. ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டின் காலநிலை தொடர்பான நிகழ்ச்சிநிரலை அடிப்படையாக வைத்து, அச்சுறுத்தல் விடுக்கக்கூடும். இதன்போது ஏற்றுமதிக்கும் தடைகள் விதிக்கக்கூடும். எங்களுடைய ஏற்றுமதியின் பல்வகை தன்மை பேணப்பட வேண்டும். MCC உடன்படிக்கையின் ஊடாக இந்த நாடு அமெரிக்காவுக்கு அடிமையாகவுள்ளது என கூறப்படுகின்றது. 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றபோது இதனை கூறவில்லை. அப்போது கூறிய விடயங்களுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். MCC ஐ முழுமையாக கிழித்தெறிய வேண்டும். எக்சாவை கிழித்தெறிய வேண்டும். சோபா உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டும். தேவை என்றால் சிங்கப்பூர் – இலங்கைக்கு இடையிலான வர்த்தக உடன்படிக்கையையும் முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச இதன்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்