சட்டத்தை விமர்சிக்கும் நீதிபதிகளை பதவிநீக்கும் பிரேரணைக்கு போலந்து அனுமதி

சட்டத்தை விமர்சிக்கும் நீதிபதிகளை பதவிநீக்கும் பிரேரணைக்கு போலந்து அனுமதி

சட்டத்தை விமர்சிக்கும் நீதிபதிகளை பதவிநீக்கும் பிரேரணைக்கு போலந்து அனுமதி

எழுத்தாளர் Staff Writer

21 Dec, 2019 | 6:21 pm

Colombo (News 1st) அரசாங்கத்தின் சட்ட மறுசீரமைப்புக்களை விமர்சிக்கும் நீதிபதிகளைப் பதவிநீக்கும் பிரேரணைக்கு போலந்து பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.

பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது 233 வாக்குகள் ஆதரவாகவும் 205 வாக்குகள் எதிராகவும் வழங்கப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்ட மாற்றங்களை மறுபரிசீலனை செய்யுமாறு ஐரோப்பிய ஆணைக்குழு வலியுறுத்திய பின்புலத்தில் குறித்த சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து போலந்து விலகவேண்டி ஏற்படும் என அந்நாட்டின் உயர்நீதிமன்றம கடந்த புதன்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்