அதிவேக வீதி பஸ்களுக்கான கட்டணத்தில் மாற்றம்

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணத்தில் திருத்தம்

by Staff Writer 20-12-2019 | 6:58 PM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களுக்கான கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி முதல் தெற்கு அதிவேக வீதியின் மாத்தறையில் இருந்து நீர்கொழும்பு வரையிலும் காலியிலிருந்து நீர்கொழும்பு வரையிலும் பயணிக்கும் பஸ்களின் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நீர்கொழும்பில் இருந்து மாத்தறை வரையில் பயணிக்க அறவிடப்பட்ட 720 ரூபா பஸ் கட்டணம் 700 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் இருந்து காலிக்கு செல்ல தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அறவிடப்பட்ட 630 ரூபா கட்டணம் 600 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.