சுவிஸ் முன்னாள் தூதரக அதிகாரி நாட்டிற்கு வருகை

சுவிட்சர்லாந்தின் முன்னாள் தூதரக அதிகாரி ஒருவர் நாட்டிற்கு வருகை

by Staff Writer 20-12-2019 | 3:09 PM
Colombo (News 1st) சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு சுவிட்சர்லாந்து முன்னாள் தூதரக அதிகாரியான ஜோர்ஜ் ப்ரீடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தமது நாட்டின் வௌிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை வௌிவிவகார அமைச்சருக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தொலைபேசியூடாக கலந்துரையாடலைத் தொடர்ந்து, முன்னாள் தூதரக அதிகாரி நாட்டை வந்தடைந்ததாக சுவிட்சர்லாந்து வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தூதரக அதிகாரியான ஜோர்ஜ் ப்ரீடன் மற்றும் இலங்கையின் தற்போதைய சுவிட்சர்லாந்து தூதுவர் ஹென்ஸ்பிட்டர் மொக் ஆகியோர் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தூதரக பெண் அதிகாரியின் விவகாரத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு தீர்வு காண்பதற்கு எதிர்பார்ப்பதாக சுவிட்சர்லாந்து வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.