by Staff Writer 20-12-2019 | 4:02 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை குறித்த அறிக்கை ஜனாதிபதி செயலத்தில் கையளிக்கப்பட்டதாக ஆணைக் குழுவின் செயலாளர் H.M.P.B. ஹேரத் தெரிவித்துள்ளளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் கடந்த 3 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆணைக்குழுவிற்கு இதுவரை 65 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் 35 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் H.M.P.B. ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐவரடங்கிய ஆணைக்குழுவொன்று கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலைமையில் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலாளர் W.M.M. அதிகாரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.