சக்தி நத்தார் வலயம் இன்று மாலை அங்குரார்ப்பணம்

சக்தி நத்தார் வலயம் இன்று மாலை அங்குரார்ப்பணம்

சக்தி நத்தார் வலயம் இன்று மாலை அங்குரார்ப்பணம்

எழுத்தாளர் Staff Writer

20 Dec, 2019 | 3:48 pm

Colombo (News 1st) நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சக்தி, சிரச நத்தார் வலயம் கொழும்பு – 2 பிரேபுரூக் பிளேஸிலுள்ள எமது தலைமையக வளாகத்தில் இன்று (20) மாலை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தினமும் மாலை 5 மணி முதல் நத்தார் வலயம் மக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் சேவைப் பிரிவினால் நிர்மாணிக்கப்பட்ட பெத்லஹேம் நகர் போன்ற அமைப்பை இம்முறை நத்தார் வலயத்தில் பார்வையிட முடியும்.

பரிசுத்த பாப்பரசரினால் ஆசீர்வதிக்கப்பட்ட மரியன்னையின் திருச்சொருபத்தை காணும் வாய்ப்பும் நத்தார் வலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இம்முறையும் பிரமாண்டமான நத்தார் மரம் சக்தி நத்தார் வலயத்தை அலங்கரிக்கின்றது.

சிறுவர்களுக்காகவே பிரத்தியேகமாக பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், சக்தி நத்தார் வலயத்தில் பனிமழையில் விளையாடும் வாய்ப்பு சிறுவர்களுக்கு கிடைக்கவுள்ளது.

சக்தி TV இன் பிரதான செய்திகள் நேரடியாக ஔிபரப்பாகும் விதத்தையும் சக்தி நத்தார் வலயத்தில் காண முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்