மனைவியைக் கொன்றவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

மனைவியைக் கொன்றவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

by Bella Dalima 19-12-2019 | 4:07 PM
Colombo (News 1st) மனைவியின் உயிரிழப்பிற்கு காரணமான கணவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கரால் குற்றவாளிக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி - திருநகர் பகுதியில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட தகராறின் போது கணவனின் தாக்குதலுக்கு இலக்கான மனைவி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 2019 ஜூன் 7ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்குத் தொடுனர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் வழக்கை நெறிப்படுத்தியதுடன், பிரதிவாதி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் மன்றில் முன்னிலையானார். சம்பவ தினத்தன்று பிரதிவாதி திட்மிட்டு நடந்துகொள்ளவில்லை எனவும் கோபாவேசத்தால் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் சாட்சியாளர்களால் உரிய சாட்சியங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், பிரதிவாதிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 5000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 5 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.