சம்பா, நாட்டரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை

சம்பா, நாட்டரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

by Staff Writer 19-12-2019 | 6:29 PM
Colombo (News 1st) சம்பா மற்றும் நாட்டரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையாக 98 ரூபாவை நிர்ணயித்து இன்றிரவு வர்த்தமானி வௌியிடப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில், இந்த விலைத்திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் M.S.M. பௌசர் தெரிவித்தார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே இந்த புதிய விலைத்திருத்தம் அமுல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.