பாட்டலி கைது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை: ஆனந்த குமாரசிறி

பாட்டலி கைது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை: ஆனந்த குமாரசிறி

பாட்டலி கைது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லை: ஆனந்த குமாரசிறி

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2019 | 5:50 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்வது தொடர்பில் சபாநாயகருக்கு இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கப்படவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

இந்த விடயமானது பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே பிரதி சபாநாயகர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நேற்று (18) மாலை தொலைபேசி வாயிலாக மாத்திரம் தனக்கு அறிவித்ததாகவும் எழுத்துமூலம் இதுவரை இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் அறிவிக்கவில்லை எனவும் பிரதி சபாநாயகர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகரின் தலைமையின் கீழ் செயற்படுவதால் அவர்களைக் கைது செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிப்பது சம்பிரதாயப்பூர்வமான விடயமாகவும். எனினும், அவ்வாறு அறிவிக்காது பாட்டலி சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை கவலைக்குரிய விடயம் எனவும் பிரதி சபாநாயகர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பாராளுமன்ற சம்பிரதாயங்களை தொடர்ந்தும் பேண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்