மாத்தளை மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோல்வி

மாத்தளை மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோல்வி

மாத்தளை மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோல்வி

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2019 | 5:52 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்திற்குட்பட்ட மாத்தளை மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 8 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மாநகர சபையின் மூன்று உறுப்பினர்கள் இன்று சபைக்கு சமூகமளிக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, ஒன்றிணைந்த முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களே சபைக்கு சமூகமளிக்கவில்லை என நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

எதிர்வரும் 14 நாட்களுக்குள் மீண்டும் புதிய வரவு செலவுத் திட்டத்தை சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக மாத்தளை மாநகர மேயர் டல்ஜித் அலுவிஹாரே குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்