மரக்கறி வகைகளின் விலைகள் ஜனவரியில் குறைவடையும் என எதிர்பார்ப்பு

மரக்கறி வகைகளின் விலைகள் ஜனவரியில் குறைவடையும் என எதிர்பார்ப்பு

மரக்கறி வகைகளின் விலைகள் ஜனவரியில் குறைவடையும் என எதிர்பார்ப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2019 | 4:09 pm

Colombo (News 1st)  மரக்கறி வகைகளின் விலைகள் அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதி அளவில் குறைவடையக்கூடும் என்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருட இறுதியில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பது சாதாரணமான விடயம் என நிறுவனத்தின் பணிப்பாளர் தமிந்த பிரியதர்ஸன தெரிவித்தார்.

கடந்த வருட விலையுடன் ஒப்பிடுகையில் அரியின் விலை குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

கடந்த வருடத்தில் இக்காலப்பகுதியில் ஒரு கிலோ அரிசி 115 ரூபாவிற்கும் 120 ரூபாவிற்கும் இடையில் விற்பனை செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்