எல்பிட்டிய பிரதேச சபை தலைவர், உப தலைவர் பதவியேற்பு

எல்பிட்டிய பிரதேச சபை தலைவர், உப தலைவர் பதவியேற்பு

எல்பிட்டிய பிரதேச சபை தலைவர், உப தலைவர் பதவியேற்பு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2019 | 3:43 pm

Colombo (News 1st) எல்பிட்டிய பிரதேச சபை தலைவர் மற்றும் உப தலைவர் ஆகியோர் இன்று முற்பகல் பதவியேற்றனர்.

தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

எல்பிட்டி பிரதேச சபையின் புதிய தலைவராக கருணாசேன பொன்னம்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதேச சபையின் உப தலைவராக நாகொட ஜயசேன பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற எல்பிட்டி பிரதேச சபை தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் கைப்பற்றின.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்