கம்பஹாவின் சில பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 24 மணி நேர நீர்வெட்டு

by Staff Writer 17-12-2019 | 6:55 AM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு இன்று (17) காலை 8 மணிமுதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. சப்புகஸ்கந்த உபமின் நிலையத்தில் முன்னெடுக்கவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, பேலியகொட, வத்தளை - மாபோல, ஜாஎல, கட்டுநாயக்க - சீதுவ நகரசபைக்குட்பட்ட பகுதி, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, கனேமுல்ல, ரத்துபஸ்வல ஆகிய பகுதிகளில் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகிக்கப்படும் பல பகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் பதினொன்றரை மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்பிரகாரம் வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, களுத்துறை வடக்கு/ தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பயாகல, மக்கொன, பேருவளை, அளுத்கம, பெந்தொட்ட பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை 7.30 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கண்டியின் பல பகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் நாளை (18) காலை 7 மணி வரையான 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. கடுகன்னாவ, பிலிமத்தலாவ, அங்குனாவல,கன்னொருவ, பேராதனை,கெஹெல்வல,உட பேராதனை, மஹகந்த, கிரபத்கும்புர, ஈரியகம, பலன, பொத்தபிடிய,போவலவத்த, முருதலாவ, வத்துரகும்புர, பானபொக்க உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.