யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இராணுவத்தால் வீடுகள் கையளிப்பு

யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இராணுவத்தால் வீடுகள் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2019 | 8:40 pm

Colombo (News 1st) இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளைக் கையளிக்கும் திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, இராணுவத்தினர் யாழ். மாவட்டத்தில் நிர்மாணிக்கும் 700 வீடுகள் திட்டத்தில் மேலும் இரண்டு வீடுகள் பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

கரவெட்டி மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்