போயிங் நிறுவனத்தின் 737 Max ரக விமான உற்பத்தி நிறுத்தம்

போயிங் நிறுவனத்தின் 737 Max ரக விமான உற்பத்தி நிறுத்தம்

போயிங் நிறுவனத்தின் 737 Max ரக விமான உற்பத்தி நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2019 | 10:55 am

Colombo (News 1st) போயிங் நிறுவனத்தின் 737 Max ரக விமான உற்பத்தியை எதிர்வரும் ஜனவரி மாதம் தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு பாரிய விபத்துக்களையடுத்து போயிங் 737 Max ரக விமானங்கள் சுமார் 9 மாதங்களாக சேவையிலிருந்து நிறுத்தப்பட்டிருந்தன.

இருந்தபோதிலும் அதன் தயாரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்திருந்தன.

இந்தநிலையில், இவ்வாண்டு இறுதியில் 737 Max ரக விமானங்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்படும் என போயிங் நிறுவனம் நம்பிக்கை வௌியிட்டிருந்தது.

ஆனாலும், குறித்த ரக விமானங்கள் அவ்வளவு விரைவாக சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது என அமெரிக்க விமானசேவை ஒழுங்குபடுத்துநர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போயிங் 737 Max ரக விமானங்கள் இரண்டு, இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் விபத்துக்குள்ளாகியதில் 300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்