by Staff Writer 17-12-2019 | 7:31 AM
Colombo (News 1st) பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (17) முதல் கண்டிக்கு மேலுமொரு ரயிலை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு - கோட்டையிலிருந்து காலை 9 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ள ரயில், முற்பகல் 11.30 மணிக்கு கண்டியை சென்றடையும் என ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்த ரயில் கம்பஹா மற்றும் பேராதனை ரயில் நிலையங்களில் மாத்திரம் தரித்துநிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சொகுசு ரயில் கண்டியிலிருந்து மாலை 4.55 மணிக்கு புறப்படுவதுடன் இரவு 7.30 மணியளவில் கொழும்பை வந்தடையவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி வரை இந்த விசேட ரயில் சேவையில் ஈடுபடவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் கொழும்பிலிருந்து பதுளைக்கு விசேட ரயிலொன்று சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ரயில் பேராதனையூடாக பதுளைக்கு பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.