திருநங்கையாக நடிக்க விரும்பும் ரஜினி

திருநங்கையாக நடிக்க விரும்பும் ரஜினி

திருநங்கையாக நடிக்க விரும்பும் ரஜினி

எழுத்தாளர் Bella Dalima

17 Dec, 2019 | 4:22 pm

திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தர்பார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய போதே அவர் தனது ஆசையைக் கூறியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பாரில் ரஜினிகாந்த் நீண்ட இடைவௌிக்கு பிறகு பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் நேற்று (16) வெளியிடப்பட்டது.

மும்பையில் நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார். இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினி, தனக்கு பொலிஸ் வேடத்தில் நடிக்க பிடிக்காது என்று கூறியுள்ளார்.

நடிக்க விரும்பும் கதாபாத்திரம் எது என கேட்டதற்கு, தனக்கு திருநங்கையாக நடிக்க ஆசை என கூறிய ரஜினி, தர்பார் படத்தில் இடம்பெறும் ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரம், மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை விட சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்