குவாஹாட்டியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது

குவாஹாட்டியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது

குவாஹாட்டியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

17 Dec, 2019 | 6:02 pm

Colombo (News 1st) இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை அடுத்து குவாஹாட்டியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டுள்ளது.

முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் நேற்று (16) நடைபெற்ற சட்டம் ஒழுங்கு மறு ஆய்வுக் கூட்டத்தில் குவாஹாட்டியில் ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 11ஆம் திகதி குவாஹாட்டியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதனிடையே ,குவாஹாட்டியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, வாகனப் போக்குவரத்து அங்கு வழமைக்குத் திரும்பியுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்