ஏப்ரல் 21 தாக்குதல்: சாட்சி விசாரணைகள் ஆரம்பம்; இடைக்கால அறிக்கை கையளிக்கப்படவுள்ளது

ஏப்ரல் 21 தாக்குதல்: சாட்சி விசாரணைகள் ஆரம்பம்; இடைக்கால அறிக்கை கையளிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

17 Dec, 2019 | 5:19 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மற்றும் சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சாட்சிப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது இந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் 40 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் H.M.B.P. ஹேரத் குறிப்பிட்டார்.

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் இரண்டு பொலிஸ் உயரதிகாரிகளிடம் ஏற்கனவே சாட்சி விசாரணைகள் இடம்பெற்றதாக H.M.B.P. ஹேரத் கூறினார்.

எதிர்வரும் வியாழக்கிழமை (19) இந்த தாக்குதல் தொடர்பான இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 47 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்