இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கை அகதிகள் கோரிக்கை

இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கை அகதிகள் கோரிக்கை

இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என இலங்கை அகதிகள் கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2019 | 8:24 pm

Colombo (News 1st) இந்தியாவில் அகதிகளாகத் தஞ்சமடைந்த இலங்கையர்கள் தமக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் இராமநாதபுரம் – மண்டபம் முகாமில் அகதிகளாக வசித்து வரும் மக்கள் தாம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

மூன்று தலைமுறையாக தமிழகத்தில் வசித்தும் தங்களுக்கு குடியுரிமை கிடைக்காததால், அகதி என்ற பெயரிலேயே தாம் வாழ்வதாக அவர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட போர் காரணமாக தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்கள் பலர் அங்கு பல்வேறு முகாம்களில் வசித்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்