அமைச்சர் இழைத்த தவறுக்காக மன்னிப்பு கோரிய எஸ்டோனிய ஜனாதிபதி

அமைச்சர் இழைத்த தவறுக்காக மன்னிப்பு கோரிய எஸ்டோனிய ஜனாதிபதி

அமைச்சர் இழைத்த தவறுக்காக மன்னிப்பு கோரிய எஸ்டோனிய ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

17 Dec, 2019 | 1:39 pm

Colombo (News 1st) பின்லாந்தின் புதிய பிரதமரை தமது நாட்டின் உள்துறை விவகார அமைச்சர் ஏளனம் செய்தமைக்காக எஸ்டோனிய (Estonia) ஜனாதிபதி மன்னிப்புக் கோரியுள்ளார்.

பின்லாந்தின் புதிய பிரதமர் சன்னா மரீனை, விற்பனைப் பெண்ணென எஸ்டோனிய உள்விவகார அமைச்சரான 70 வயதுடைய மார்ட் ஹெல்மி விபரித்திருந்தார்.

அவருடைய இந்தக் கருத்தினால் பின்லாந்துப் பிரதமர் சங்கடப்பட்டிருப்பாரென எஸ்டோனிய ஜனாதிபதி கேர்ஸ்ட்டி கல்ஜூலெய்ட் (Kersti Kaljulaid) தெரிவித்துள்ளார்.

பின்லாந்துப் பிரதமர் சன்னா மரீன் (Sanna Marin) 4 கட்சிகளுடன் இணைந்து கூட்டணியொன்றை ஸ்தாபித்துள்ளார்.

அவரது அரசாங்கத்தில் கூட்டணியமைத்துள்ள கட்சிகள் அனைத்தும் பெண்களால் தலைமை தாங்கப்படுபவையாகும்.

பின்தங்கிய குடும்பமொன்றில் பிறந்த சன்னா மரீன், பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்னர் விற்பனைப் பெண்ணாகப் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்