லெபனானில் தொடரும் போராட்டம்; பலர் காயம்

லெபனானில் தொடரும் போராட்டம்; பலர் காயம்

by Staff Writer 16-12-2019 | 2:57 PM
Colombo (News 1st) லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ( Beirut) கலகத் தடுப்புப் பொலிஸாருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்ற மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர். பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் போத்தல்கள் மற்றும் தீப்பந்தங்களை வீசியுள்ளனர். இந்தநிலையில், போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதுடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அத்துமீறல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு லெபனான் உள்விவகார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த அத்துமீறல்களில் மேலும் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியின் பொருளாதார முகாமைத்துவத்தில் காணப்படும் தவறுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இந்தப் போராட்டங்களையடுத்து அந்நாட்டுப் பிரதமர் ஷாட் அல் ஹரிரி பதவி விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.